பள்ளிகளில் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி கற்கும் முறையை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட 18 பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைப்பட்டிகை (வயர்லெஸ் டேப்லெட்) ஆகிய ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரியான் டெக் நிறுவனம் சார்பில் இலவசமாக வழங்குகிறது.
முதல்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளி, கொய்யாத்தோப்பு தொடக்கப் பள்ளி மற்றும் சென்னை உயர்நிலைப் பள்ளி, இருசப்பா தெரு உயர்நிலைப் பள்ளி மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை நடுநிலைப் பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் முறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுஉள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச் சாலையில் உள்ளஉயர்நிலைப் பள்ளியில் அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ருக்மாங்கதன் வ.
வட சென்னை.