பாய்ந்தது போக்சோ! தப்பி ஓடிய குற்றவாளி??
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள நெடுங்கண்டம் என்ற பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை இருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு உடனடியாக மாஜிஸ்திரேட் முன்பு ஒப்படைத்து பின்னர் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாலை நேரம் என்பதால் மாஜிஸ்திரேட் அவர்களின் வீட்டிற்கு இரண்டு குற்றவாளிகளையும் அழைத்துச் சென்று அவர் முன்பாக ஒப்படைக்கப்பட்ட பொழுது முதல் நபர் விசாரணை முடிந்து இரண்டாம் நபர் விசாரணை நடக்கும் பொழுது முதல் நபர் தப்பி ஓடி சென்றுள்ளார் நெடுகண்டம் சிவில் ஸ்டேஷன் அருகில் உள்ள காட்டில் அவர் ஓடி மறைந்ததாலும் இரவு நேரமானதாலும் போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் அவரை பின்தொடர்ந்து தேடியும் பயனில்லை அவர் அங்கிருந்து தம்பி ஓடினார் அவரை பிடிக்க சிறப்பு குழு ஒன்று அமைத்து போலீஸ் அதிகாரிகள் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் ஒருவரை மட்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.