புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம். தென்னகத்து பதுவை, கோடி அற்புதர் என மக்களால் அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை தொடங்கும். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் கொடி மந்திரிக்கப்பட்டு பின்னர் பவனியாக கொண்டு வந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
நேற்று மாலையில் நடந்த கொடியேற்றத்தை தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது. இதில் நெல்லை தூத்துக்குடி திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கலந்து கொண்டனர். திருத்தலப் பெருவிழாவின் 13 நாட்கள் நவ நாட்களாக கொண்டாடப்படுகின்றன. திருவிழா நாட்களில் தினமும் காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நற்கருனை ஆசீர் நடக்கிறது.
Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திருத்தலப் பெருவிழாவின் சிறப்பு நிகழ்வாக வருகிற 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பாளையங்கோட்டை மறை மாவட்டம் முன்னாள் ஆயர் மேதகு ஜூர் பால்ராஜ் தலைமையில் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து நற்கருணைப்பவனின் நடைபெறுகிறது. பிப்.6ம் தேதி திங்கட்கிழமை மாலையில் குடிமறை மாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் தலைமையில் திருப்பலியும், புனித அந்தோணியார் உருவம் தாங்கிய தேர் பவனியும் நடக்கிறது.
ஆண்டுப் பெருவிழா ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி வருகின்ற 7ஆம் தேதி காலை 4.30 மணி முதல் திருப்பலி, 11.30 மணிக்கு பெருவிழா திருப்பலியும் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் ஆண்டு பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபரும் பங்குத்தந்தைமான மோட்சராஜன், ஆன்மீகத் தந்தை சகாயதாசன், உதவி பங்குத்தந்தை மிக்கேல் ராஜ், அருட் சகோதரிகள் திருத்தல பணியாளர்கள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.