பூதப்பாண்டியில் இல்லம் தேடி கல்வி முதலாம் ஆண்டு விழா!!
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கன்னியாகுமரி மாவட்டம்,தேவாளை ஒன்றியம், பூதப்பாண்டி சர்.சிபி அரசு மேல்நிலைப் பள்ளியில் பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இல்லம் தேடிக்கல்வி தோவாளை வட்டார பொறுப்பாளர் தாயாளன் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பூதப்பாண்டி பேரூராட்சி துணை தலைவர் அனில்குமார் வாழ்த்துரை வழங்கி சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்களான எஸ்.நாராயணசாமி மற்றும் வெங்கடேஷ் LIC ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
இவ்விழாவில் குழந்தைகளின் கலைநிகழ்சிகளும்,பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வு பாடல்களும் மேடையில் அரங்கேறியது.நிறைவில் இல்லம் தேடிக்கல்வி ஆசிரியை L.இந்திரா வீரபாகு நன்றி உரையோடு விழா நிறைவு பெற்றது.
இல்லம் தேடிக்கல்வி முதலாம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும் கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்.
என்ற சிந்தனையோடு
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தமிழக துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.