மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு!!
பல கிலோமீட்டர் தூரம் காத்திருக்கும் வாகனங்கள்!!
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சூழ்நிலையில் மலைப்பாதையில் 21ஆவது மற்றும் 22 வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே உள்ள பகுதியில் இருந்த பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்துள்ளது இதனால் சாலையை கடந்து எந்த வாகனமும் செல்ல முடியாதபடி உள்ளது.ந்து கீழாக வரும் வாகனங்களும் கீழிருந்து மேலாக செல்லும் வாகனங்களும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன.
இதில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் மாட்டிக் கொண்டு இருப்பதாக தெரிகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் கீழே விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.மேலும் அந்தப் பகுதியில் சாலை விரிவாக்க பணியும் நடந்து கொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இரவு நேரத்தில் மலைப்பாதையின் நடுவில் வாகன ஓட்டிகள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்.
விழும் நிலையில் மரம் இருந்திருந்தால் முன்னரே வெட்டி அகற்றி இருந்தால் இது போன்ற ஒரு சூழ்நிலையில் யாரும் சிக்கி தவிக்க வேண்டியது இல்லை என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.