மிஸ் தமிழ்நாடு’ அழகி பட்டம் வென்ற கோவை பெண்!!

மிஸ் தமிழ்நாடு

மிஸ் தமிழ்நாடு

மிஸ் தமிழ்நாடு அழகி பட்டம் வென்ற கோவை பெண்!!

பேகாசஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 20 வருடங்களாக அழகி போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சமீபத்தில் இந்நிறுவனம் சார்பில் கேரள மாநிலம் கொச்சியில் மிஸ் தென் இந்திய அழகி போட்டி 2023 (திருமணம் ஆனவர்களுக்கானது) நடைபெற்றது.

இப்போட்டிக்கு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 14 இறுதி போட்டியாளர்கலில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் கோவையை சேர்ந்த ஷாலு ராஜ் என்பவர் மிஸ் தென் இந்திய அழகி போட்டியில் இரண்டாவது ரன்னர் அப் இடத்தையும், மிஸ் தமிழ்நாடு அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.

இந்த நிகழ்வை யுனிக் டைம்ஸ் மற்றும் டி குயூ இணைந்து வழங்கியது. பெகாசஸ் எம்.டி., ஜெபிதா அஜித், பெகாசஸ் தலைவர் அஜித் ரவி மற்றும் புது தில்லியின் நிதி அமைச்சகத்தின் முதன்மை ஆணையர் ஸ்ரீராம் பரத் ஆகியோர் மிஸ் தென்னிந்தியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முடிசூட்டினார்கள்.

மிஸ் தென் இந்திய அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரக்கத் ஜூவல்லர்ஸ் வடிவமைத்த தங்க கிரீடம் சூட்டப்பட்டது.

பன்முக ஆளுமை கொண்ட ஷாலு ராஜ், போட்டியில் Mrs.Diligent, Mrs.Fitness மற்றும் Mrs.Promising Model உட்பட 4 விருதுகளை பெற்றார்.

இது குறித்து ,செய்தியாளர்களிடம் பேசிய ஷாலு ராஜ், இந்த வெற்றியை தனது குடும்பத்துக்கும், தமிழ்நாட்டிற்க்கும் அர்ப்பணிப்பதாக கூறினார்.

பிசினஸ் கான்க்ளேவ் அமர்வில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) பற்றிய அவரது கேள்வியும், போட்டியில் இந்தியாவில் சிறார் கற்பழிப்பைக் குறைக்க கடுமையான சட்டங்களை உருவாக்குவது குறித்த அவரது கருத்தும் இவரின் வெற்றியை தீர்மானிக்க வைத்தது.

ஒரு தொழில்முனைவோரான ஷாலு, சமுதாயத்தில் பின்தங்கிய பெண்களை தனது கஃபே வில் பணியாளர்களாக நியமிக்கவும், அவர்களுக்கு போதுமான காபி-தொழில் பற்றி தெரிந்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராக உள்ளதாகவும் , தனிப்பட்ட முறையில் தொண்டு நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் , இதன் மூலம் கோவையின் கிராமப்புறங்களில் உள்ள பெண்களிடையே சானிட்டரி நாப்கின் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி, வரும் நாட்களில் பெண்களுக்கு நன்மை பயக்கும் சமூகப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

ஷாலு பயிற்சி பெற்ற கிளாசிக்கல் டான்சர், விவாஹா-தி லக்ஸ்க்ஸ் வெட்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் & கிரியேட்டிவ் டைரக்டர், காப்பி ப்லோகர் மற்றும் கோயம்புத்தூர் & அவினாசியில் உள்ள ஷீ ப்ரூஸ் கிளப் கஃபேவின் இயக்குனர் என பல பரிணாமங்கள் கொண்டுள்ளார்.

இன்னும் இரண்டு மாதங்களில் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மிஸஸ் இந்தியா குளோபல் பட்டத்திற்காக அவர் போட்டியிட உள்ளார்.

மேலும் அவர், மிஸஸ் தமிழ்நாடு பிட்னஸ் 2022 விருது, வொண்டர் வுமன் ஐகான் 2022 & டைம்ஸ் ஆப் இந்திய எக்ஸ்சலன்ஸ் 2021 ஆகியவற்றை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp