முற்போக்கு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
கோவை ஈஷா மையத்துக்கு யோகா கற்பதற்காக சென்ற திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ கடந்த டிசம்பர் 18ஆம் தேதி பதட்டத்தோடு ஈஷா யோகா மையத்தை விட்டு வெளியேறியிருந்த நிலையில் அன்றிலிருந்து காணாமல் போனார்.
இந்நிலையில் இன்று ஈஷா யோகா மையத்துக்கு அருகில் செம்மேட்டில் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேற்படி சுபஸ்ரீ -யின் மர்ம மரணத்திற்கு நீதி கோரி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கொலை வழக்கில் கைது செய்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் முற்போக்கு அமைப்புகளின் சார்பில் இன்று 02.01.2023 காலை 10.30 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.