கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள தோக்கு பாறை என்ற பகுதியில் அரசு பள்ளியில் மூன்று முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கான கல்வி கற்றலை மேம்படுத்தும் விதமாக அங்கு உள்ள சுவர்களில் பல வண்ணங்களில் படங்களை வரைந்தும் கல்விகளை கற்கும் முறையான விவசாய பூங்காக்கள் மற்றும் விலங்கின பூங்காக்கள் மற்றும் நீர்வீழ்ச்சி,
பூங்காக்களை ஏற்படுத்தி முப்பது வகையான கற்றல்களை மாணவர்களுக்கு அளிக்கும் விதமாக தரமானதாக அரசு பள்ளியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இதனை இன்று மூணார் பகுதியை சார்ந்த வழக்கறிஞர் ஏ ராஜா சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணார்.