கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் வசித்து வரும் தோட்ட தொழிலாளர் குடும்பங்கள் வீடு இல்லாதவர்களுக்கு நிலம் வாங்குவதற்கு 100 பேருக்கு நிலம் வாங்குவதற்கு அரசின் நிதி உதவியும் நிலம் உள்ளவர்களுக்கு 50 பேருக்கு வீடு கட்டுவதற்கான நிதி உதவியும் நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கே. ராஜன் அவர்களால் வழங்கப்பட்டது .
அவருடன் மூணார் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர். கே. ராஜா அவர்கள் தலைமை வகித்தார் மற்றும் மூணார் பஞ்சாயத்து தலைவர் பிரவீனா ரவிக்குமார் கலந்து கொண்டார்.
இச்சலுகையை வழங்கி அமைச்சர் கே. ராஜன் உரையாற்றிய போது 1963 ஆம் ஆண்டு நில உரிமை சட்டம் மாற்றப்பட கேரள சட்டசபையில் இதை மாற்றுவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன், மூணார்.