இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் தொடர்ச்சியாக மூன்று நோ-பால் வீசியதன் மூலம் இந்திய அணியின் இளம் வீரரான அர்ஸ்தீப் சிங் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
புனேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. காயம் காரணமாக நடப்பு டி.20 தொடரில் இருந்து விலகிய சஞ்சு சாம்சனுக்கு பதிலாக, ராகுல் திர்பாதி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் கடந்த போட்டியில் விளையாடாத அர்ஸ்தீப் சிங் இந்த போட்டிக்கான ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளதால், கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஹர்சல் பட்டேல் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு வழக்கம் போல் பதும் நிஷான்கா மற்றும் குஷால் மெண்டீஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஹர்திக் பாண்டியா வீசிய போட்டியின் முதல் ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை வீரர்கள், அர்ஸ்தீப் சிங் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் 19 ரன்கள் குவித்தனர். இதற்கு முக்கிய காரணமாக அர்ஸ்தீப் சிங்கே திகழ்ந்தார். ஒரே ஓவரில் அர்ஸ்தீ சிங் தொடர்ச்சியாக மூன்று நோ-பால் வீசினார், இதனை இலங்கை வீரர்களும் ஓரளவிற்கு சரியாக பயன்படுத்தி கொண்டனர்.
இந்தநிலையில், ஒரே ஓவரில் 3 நோ-பால் அதுவும் தொடர்ச்சியாக வீசியதன் மூலம் அர்ஸ்தீப் சிங் மோசமான வரலாறு ஒன்றில் இடம்பிடித்துள்ளார்.
Most no-balls bowled in T20I career:
12 – Arshdeep Singh🇮🇳
11 – Hasan Ali 🇵🇰
11 – Keemo Paul
11 – Oshane Thomas
10 – Richard Ngarava🇿🇼INDvSL
ஒரே ஓவரில் தொடர்ச்சியாக மூன்று நோ-பால் வீசியதன் மூலம், டி.20 போட்டிகளில் ஒரே ஓவரில் ஹாட்ரிக் நோ-பால் வீசிய முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை அர்ஸ்தீப் சிங் பெற்றுள்ளார். இது மட்டுமல்லாமல் சர்வதேச டி.20 போட்டிகளில் அதிக நோ-பால் வீசிய வீரர்கள் வரிசையிலும், பாகிஸ்தான் அணியின் ஹசன் அலியை பின்னுக்கு தள்ளி அர்ஸ்தீப் சிங் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.