லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!! காவல்துறை நடவடிக்கை!!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முரளி, இவருக்கு நேற்று ஜி கவுண்டம்பாளையம் பேருந்து நிலையம் அருகே, சட்டவிரோதமாக மூணு எண் கொண்ட லாட்டரி சீட்டு விற்பனையில் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு சென்று சோதனை மேற்கொண்ட போது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த 67 வயதான ராமச்சந்திரன், என்பவர் சட்ட விரோதமாக மூணு நெம்பர் லாட்டரி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவரிடம் இருந்து ஒரு பில் புக், 100 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.