வணிகவியல் துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!
வணிகவியல் துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பெஸ்ட் அகாடமி சி.ஏ. கோச்சிங் மையம் சார்பாக,நடைபெற்றது…
கோவை காந்திபுரம் பகுதியில் பெஸ்ட் அகாடமி சி.ஏ.கோச்சிங் மையம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.பட்டய கணக்காளர் துறைக்கான தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்கி வரும் இந்த அகாடமியில் பயின்ற பலர் பட்டய கணக்காளர் துறையில் சாதித்து வருகின்றனர்..இந்நிலையில்,வணிகவியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான நிகழ்ச்சி கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் உள்ள சோழன் அரங்கில் நடைபெற்றது.. பெஸ்ட் அகாடமி பயிற்சி மையத்தின் நிறுவனர் சிவக்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,துணை நிறுவனர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்கு வணிகவியல் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் பட்டய கணக்காளர்கள் துறை தேர்வுகளை எதிர் கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து,பிரபல பட்டய கணக்காளர்கள் சந்தீப் சபாபதி,மற்றும் லட்சுமணன் ஆகியோர் ஆலோசணைகளை வழங்கினர்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகளுக்கான விநாடி,வினா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் வினாடி வினா தொகுப்பாளர் நவீன் பிரபு கலந்து கொண்டார்.இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது..நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
-சீனி போத்தனூர்.