வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்! கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை!!
கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி எஸ் சமீரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைகள், கூறி இருப்பதாவது, கோவை மாவட்டத்தில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், கோவையில், 56 கிராம பஞ்சாயத்துகளில் வரும் 19ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது, அதில் ஆனைமலை, அன்னூர், காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி, சர்க்கார் சாமகுளம், சுல்தான்பேட்டை, சூலூர், தொண்டாமுத்தூர், ஆகிய கிராமங்களில் உள்ள, 56 பஞ்சாயத்துகளில், இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது, இம்முகாமில், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை, போன்ற பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கு பெற உள்ளனர், இந்த முகாமில் பட்டா மாறுதல், சிறுகுறி விவசாயிகளுக்கு சான்று வழங்குதல், பயிர் கடன் விண்ணப்பம் பெறுதல், கால்நடை முகாம், கிசான் கடன் அட்டை விண்ணப்பம் பெறுதல், ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் பெறுதல், போன்ற பல்வேறு விண்ணப்பங்களுக்கு உடனடியாக நடவடிக்கை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க படும், என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.