ஸ்ரீ நாக சாய் மந்திர் சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது!!
கோவை: பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற .உள்ள கோவை சாய்பாபா திருக்கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விழாவை முன்னிட்டு தொடர்ந்து நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்…
தென்னிந்தியாவின் முதல் சீரடி சாய்பாபா திருக்கோவில் மற்றும் உலகிலேயே இரண்டாவது பளிங்குக் கல்லால் உருவாக்கப்பட்ட மூலவர் சிலை என்ற பெருமை கொண்டதும்,கோவை மாநகரில் உள்ள வரலாற்று சின்னங்களில் முக்கிய இடமாகவும் பங்கு வகிக்கும், ஸ்ரீ நாக சாய் மந்திர் சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவில் வளாக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை மற்றும் கோவில் அறங்காவலர்கள் குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் செயலாளர் பாலசுப்பிரமணியன் பொருளாளர் டாக்டர் சர்வோத்தமன் மற்றும் அறங்காவலர்கள் தியாகராஜன் சந்திரசேகர் சுகுமார் ஆகியோர் பேசினர்.அப்போது 20 வருடங்களுக்கு பிறகு இந்த மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாகவும், விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வசதிகளுக்கென கோவிலின் அருகே சுமார் ஆறு இடங்களில் வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும்,சுமார் ஒரு இலட்சம் பேர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக கூறினர். மேலும் விழாவை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்களாக பட்டிமன்றம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், குறிப்பாக 80 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நாகசாயி மந்திர் கோவிலின் அனைத்து குறிப்புகளும் அடங்கிய ஸ்ரீ நாகசாயி தல வரலாறு புத்தகம் வெளியீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்…
-சீனி போத்தனூர்.