அசோசியேஷன் நிர்வாக கமிட்டி கூட்டம் நடைபெற்றது!!
செல்வ சிந்தாமணி குளம் வாகிங் அசோசியன் நிர்வாக கமிட்டி கூட்டம் தலைவர் ரங்கராஜன் தலைமையில் இன்று (18.2.23)காலை 8 மணிக்கு சிலம்ப பயிற்சி நடைபெறும் இடத்தில் நடைபெற்றது.
இதில் ரங்கராஜன். தீபம் ராஜா. காட்டு துரை.ஜெகன்.சுரேஷ் குமார்.ராதா கிருஷ்னன். விஜயலட்சுமி,மல்லி,வேலுசாமி,சீதாலட்சுமி,கண்மனி பாபு,ஹனீப்,சுரேஷ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
ஆலோசனை கூட்டத்தில் ஜெகன் அவர்கள் கடந்த மாதம் நடைபெற்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யபட்ட அசோசியேசன் பதிவிற்கான பணிகளை தலைவர் ரங்கராஜன் தலைமையில் தீபம் ராஜா கண்மனி பாபு ஜெகன் ஆகியோர் பதிவிற்கான அனைத்து
வேலைகளையும் செய்ததை எடுத்து கூறினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பிளம்பர் சுரேஷ் அவர்கள் மாநகராட்சி மூலமாக இந்த குளத்தை நாம் எப்படி பராமரிக்க வேண்டும்.அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு அதிகாரிகளை சந்திப்பதற்கு தான் ஒத்துழைப்பு தருவதாக கூறினார். காட்டுதுரை அவர்கள் குளம்சுத்தமாக இருக்க தானும் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்ததை தெரிவித்தார்.
சுரேஷ் அவர்கள் மாலை நேரங்களில் விளக்குகள் எரியாமல் உள்ளதை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
விஜயலட்சுமி அவர்கள் நடை பயிற்ச்சி மேற்கொள்பவர்களுக்கு அவசர தேவைகளை நிறைவு செய்ய மாநகராட்சி மூலம் டாய்லெட் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
ராதா கிருஷ்னன் அவர்கள் நடைபயிற்ச்சி செல்லும் மக்களின் வசதிக்காக குடி தண்ணீர்
தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மல்லி அவர்கள் நுழைவாயிலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனம் நிறுத்த போர்டுகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார் .
வேலுசாமி அவர்கள் வாகிங் வருபவர்களுக்கு வசதியாக நடக்கும் பாதைகளில் அதிகமான
குப்பை கேன்கள் வைக்கபட்டு அதனை மாநகராட்சி மூலம் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இறுதியாக அசோசியேசனை பதிவு செய்வதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதையும்
அடுத்த வாரம் பதிவு செய்வதற்கு நிர்வாகிகள் நிர்வாககுழு உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட வரவேண்டும் எனவும் ஜெகன்அவர்கள் தெரிவித்தார்.
இறுதியாக பொருளாளர் நன்றியுடன் கூட்டம் நிறைவு பெற்றது
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.