சோமனுார்,–விசைத்தறியாளர்கள் சங்க தலைவரும், அவரது மனைவியும் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், சோமனுார், செந்தில் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி, 76. இவரது மனைவி கருப்பாத்தாள், 68. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இரு மாவட்ட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராகவும் பழனிசாமி இருந்து வந்தார்.
கடந்த, 30 ஆண்டுகளாக, விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், அவர்களின் உரிமைகளை, அரசிடம் இருந்து போராடி பல்வேறு சலுகைகளை பெற்று தந்தவர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பழனிசாமி, சில நாட்களாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனால் துக்கத்தில் இருந்த மனைவி கருப்பாத்தாள், நேற்று காலை, 10:00 மணிக்கு இறந்தார். குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று மதியம் இருவரது உடல்களும், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அய்யம்பாளையம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. மரணத்திலும் இணைபிரியாத தம்பதியின் இறுதி ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர். இரு மாவட்டங்களிலும் விசைத்தறி கூடங்கள், விசைத்தறி தொழில் சார்ந்த நிறுவனங்கள் நேற்று செயல்படவில்லை.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.