அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி! போலி அரசு ஊழியர்களாக வளம் வந்த மில் ஊழியர்கள் கைது!!
கோவையை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன்(வயது50). இவர் தனது மகளுக்கு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டின் அருகே வசிக்கும் 7 பேர் தங்களை அரசு அதிகாரிகள், அரசு டிரைவர்கள் என்றும், நாங்கள் உங்கள் மகளுக்கு வேலை வாங்கி தருகிறோம். அதற்கு உயர் அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும்.
அதனால் நீங்கள் பணம் தர வேண்டும் என கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய சந்தானகிருஷ்ணன் தனது மகளுக்கு வேலை வாங்கி தருவதற்காக, அவர்களிடம் கடந்த மே மாதம் முதல் ஆகஸ்டு வரை பலதவணைகளாக ரூ. 21 லட்சத்தை கொடுத்துள்ளார். அதற்கு அவர்களும் சந்தான கிருஷ்ணனிடம் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளனர்.
அந்த ஆணையை பரிசோதித்த போது அது போலியானது என தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தான கிருஷ்ணனை ஏமாற்றியது, திண்டுக்கலை சேர்ந்த ஜி. சரவணக்குமார்,பின்னர் அவர்களிடம் உங்களுக்கு பல்வேறு அரசு துறைகளில் வேலை உள்ளது. நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கி தருகிறோம் என கூறி உள்ளனர். அவர்களும் நம்பி பணத்தை கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தும் பணி நியமன ஆணை வழங்குவதற்காக, பணம் கொடுத்தவர்களை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரசு முத்திரை பதிக்கப்பட்ட காரில் ஏற்றி கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு
மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதைகளை அளித்துள்ளனர். இதனால் அவர்களும், இவர்கள் உண்மையிலேயே அரசு அதிகாரிகள் தான் என நினைத்து கோடி கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்ததும் தெரியவந்தது.
இவர்கள், 20-க்கும் மேற்பட்டவர்களிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதும், அந்த பணத்தை கொண்டு, சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இன்னும் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் 20 பேரை தவிர வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்றவர்களிடம் மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக கூறுவதை மக்கள் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.