கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா கண்காட்சி வளாகத்தில் இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் இருபதாவது மாநாடு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்தது இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய அறுவை சிகிச்சைகள் குறித்தும் தொழில் நுட்பம் குறித்தும் விவாதிக்கப்பட்டு வந்தது இந்த மாநாட்டில் இந்தியா மட்டும் இல்லாது வெளிநாடுகளிலும் இருந்து ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQதகவல்களையும் தொழில்நுட்பத்தையும் வளரும் இளம் தலைமுறை மருத்துவர் அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தனர் இந்த நிலையில் இறுதி நாளான இன்று இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து இதில் கலந்துகொண்டு அறுவை சிகிச்சை சம்பந்தமான பட்டப்படிப்பை முடித்த மருத்துவர்கள் என சுமார் 1200 பேருக்கு தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி பாராட்டு சான்றிதழ்களும் பட்டங்களும் வழங்கினார் அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் தலைமை வகித்த மருத்துவர் தங்கவேலு மற்றும் துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் பேசுகையில்,
இந்த கருத்தரங்கு மற்றும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் நாடு முழுவதும் இருந்து 1200 பேர் கலந்து கொண்டுள்ளனர் அனைத்து மாநிலங்களிலும் உயர் கல்விக்கான படிப்பை முடித்து பட்டங்களை பெற்றுள்ளனர் மருத்துவர்களின் சேவை என்பது அனைவருக்கும் முக்கியமானது இதில் லேப்ராஸ்கோபிக் எண்டாஸ்கோபிக் உள்ளிட்ட சான்றிதழ்களை தற்போது பெற்றுள்ளனர் இதன் மூலம் மக்களுக்கு சேவையாற்றுவார்கள் என நம்புகின்றேன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த மருத்துவர் தங்கவேலு உட்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்
மருத்துவர் தங்கவேலு பேசுகையில்:
இந்த பயிற்சியானது இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து பெரிய நகரங்கள் சிறிய நகரங்கள் என அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது மொத்தம் 27 இடங்களில் இந்த லேப்ராஸ்கோப்பி கருவின் மூலமாக நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பயிற்சியானது நடத்தப்பட்டு வருகிறது நாளுக்கு நாள் புதுப்புது தொழில் நுட்பங்கள் வருகின்றது புதுப்புது எந்திரங்களும் வருகின்றது அந்த ஆற்றலை மேம்படுத்துவதற்காக தான் இந்த அறுவை சிகிச்சைhttps://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ பயிற்சி கொடுத்து வருகின்றோம் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டங்களை பெற்றுள்ளனர் இந்திய முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1200 மருத்துவர்கள் தற்பொழுது பட்டங்களை பெற்றுள்ளனர் இந்த பயிற்சியின் நோக்கம் என்னவென்றால் சக்தி வாய்ந்த மற்றும் திறமை பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் அவருடைய திறமைகளை வெளிப்படுத்தி இவர்களை ஊக்கப்படுத்துவது தான் இந்த கருத்தரங்கின் நோக்கம் இதன் மூலம் அவர்கள் சிறிய நகரத்தில் கூட ஏழைகளுக்கு கூட அறுவை சிகிச்சைகளை எளிதில் செய்ய முடியும் அதன் பலனும் ஏழைகளுக்கு கிடைக்கும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இந்த கருத்தரங்கின் நோக்கம் ரோபோடிக் சர்ஜரி இப்பொழுதே வந்துவிட்டது அதன் விலை அதிகமாக உள்ளது எனவே அதிக அளவில் அதை வாங்க முடியாது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் தற்பொழுது வாங்கி வருகின்றார்கள் எதிர்காலத்தில் எந்த ஒரு கண்டுபிடிப்பும் முதலில் விலை அதிகமாக இருக்கும் போகப் போக அதனுடைய விலை குறைந்து விடும் அதன் பிறகு அனைவரும் வாங்கி பயன் படுத்த முடியும் லேப்ராஸ்கோபிக் கருவிகள் கூட 1990 காலகட்டத்தில் 25 லட்சம் ரூபாய் என்று இருந்தது இப்பொழுது அனைவரும் வாங்கும் விலையில் கிடைக்கிறது ரோபோடிக் அறுவை சிகிச்சை தவிர்க்க முடியாத ஒன்று கட்டாயம் வந்தே தீரும் லேப்ராஸ்கோபிக் மூலம் செய்ய முடியாத புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் போன்ற இன்னும் சில சிகிச்சைகள் சிறப்பாக செய்ய முடியும்.
அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றிற்கு 4000 முதல் 5000 பேர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர் எனவே ரோபோடிக் அறுவை சிகிச்சை என்பதெல்லாம் மருத்துவர்கள பயிற்சி எடுக்க வேண்டும் கருவிகள் வாங்குவதற்கு அரசாங்கம் பணம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் இது போன்ற சிகிச்சைகள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சை அளிப்பதற்கும் சிகிச்சை மேற்கொள்ளும் நேரம் கூடுதலாக இருக்கும் அதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் இதனால் அரசாங்க மருத்துவமனைகளில் அந்த நெருக்கடிகள் ஏற்படும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதியை ஏற்படுத்தி உள்ளது தமிழக அரசு படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் வரும் என எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார்.
-சீனி போத்தனூர்.