கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள அல் அமீன் காலனி சேர்ந்த ஒரு நபர் இறந்து விட்டார் அவரை அடக்கம் செய்ய அவருடைய உறவினர்கள் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளார்கள்.
தற்பொழுது உக்கடம் பகுதியில் பாலம் கட்டும் வேலை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. மேலும் வாகனங்கள் அனைத்தும் புதிய பழ மார்க்கெட் ரோடு வழியாக சென்று அந்தப் பகுதியில் உள்ள குறுகிய தெருக்களின் வழியாக செல்வதால் https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது இந்த சூழ்நிலையில் இறந்தவரின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி பூ மார்க்கெட் பகுதிக்கு சென்று கொண்டு இருந்துள்ளனர் அப்போது ஆம்புலன்ஸ் பின்னால் அவருடைய உறவினர்கள் சென்றுள்ளனர்.
அப்போது போக்குவரத்து காவல்துறையினர் இதுபோன்று செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அவர்களை தடுத்துள்ளார்கள். எனவே இறந்தவரின் உறவினர்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாங்கள் இந்த பகுதியில் பல வருடங்களாக குடியிருந்து வருகிறோம்.இங்குள்ள ஒரு நபர் இறந்துவிட்டால் இதற்கு முன்பு இப்படித்தான் சென்று வந்து கொண்டிருக்கிறோம் எனவே இதற்கு நீங்கள் கண்டிப்பாக அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர்.
சிறிது நேரத்துக்கு பிறகு இரு தரப்பினரும் சமாதானம் அடைந்து அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல போக்குவரத்தை சீர் செய்து கொடுத்து உள்ளனர் .இதனால் அனைவரும் சமாதானம் அடைந்து அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.இதன்மூலம் ஒரு மணி நேர பரபரப்பு அடங்கி அனைவரும் கிளம்பிச் சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சி.ராஜேந்திரன்,செய்யது காதர்.