கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஓட்டப்பிடாரம் வ.உ.சி விளையாட்டுக் கழகம் சார்பில் 35ம் ஆண்டு விழா பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மினிமாராத்தான் போட்டி இன்று ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைப்பெற்றது.
இப்ப போட்டியானது ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரம், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரம் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன. போட்டியை ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், பஞ்சாயத்து தலைவர் துவக்கி வைத்தார். போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு பொருட்களுள் சான்றிதழ் வழங்கப்பட்டது. 3ம் இடம் முதல் 10ம் இடம் வரை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
பெண்களுக்கான பிரிவில் மாணவிகள் போட்டியில் முதல் பரிசை புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா, 2வது பரிசை புதுார் இந்து நாடார் பள்ளி மாணவி சங்கீதா, 3வது இடத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவி கனகலட்சுமி ஆகியோர் தட்டிச் சென்றனர்.
ஆண்கள் பிரிவில் முதல் 3 பரிசுகளையும் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மனோஜ்குமார், முகேஷ், முத்துமுனியாண்டி ஆகியோர் தட்டிச் சென்றனர்.
இவ்விழாவில் வ. உ. சி விளையாட்டுக் கழக தலைவர் சாமுவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் யோகராஜ், ஒருங்கிணைப்பாளர் பெரியமோகன்,மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவனத் தலைவர் எல். கே. முருகன், ஆலோசகர் தமிழாசிரியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டுக் கழக நிறுவனர் லெனின் வரவேற்றார்.
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.