கன்னியாகுமாரி மாவட்டம், தோவாளை தாலுகாவிற்குட்பட்ட துவரங்காடு பகுதியில் அமைந்துள்ள கரோல் மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளியின் எதிரே உள்ள குளத்தின் கரை உடையும் தருவாயில் விரிசல் விழுந்து இருப்பதால் அப்பகுதிகளில் வரும் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மட்டுமன்றி தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் ஆபத்தின் நிலை உணர்ந்து பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எஸ்.நாராயணசாமி கூறுகையில், மாணவ-மாணவிகளின் நலன்கருதியும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன்கருதியும் துவரங்காடு தனியார்பள்ளி எதிரேயுள்ள குளம் உடைந்து பேராபத்து வருமுன் சம்மந்தப்பட்ட நிர்வாகம் குளத்தின் கரையை செப்பனிட்டு சீரமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறோம் என்றார்.
செய்தியாளர்,
– M.சுரேஷ்குமார்.