கோவை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!!
எல் ஐ சி மற்றும் எஸ் பி ஐ சொத்துக்களை அதனை குழுமத்திற்கு தாரை வார்க்கும்,மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக சுந்தராபுரம் பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
எல் ஐ சி மற்றும் எஸ்பிஐ பொதுத்துறை சொத்துக்களை அதானி குழுமத்திற்கு தாரை வார்ப்பதை மத்திய மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும், மக்களின் பணத்தை கடனாகவும் போலியான நிறுவனங்கள் பெயரிலும் உள்ள அதானி நிறுவனத்திற்கு வழங்குவதை மோடி அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை சுந்தராபுரம் பகுதியில் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரசார் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இதில் முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் பல்வேறு நிலை நிர்வாகிகள் இஸ்மாயில் ஷாஜகான் கோபாலகிருஷ்ணன் சந்தோஷ் ஜிப்சன் மோகன் குமார் ரத்தீஷ் முருகன் மணி நடராஜ் கனகராஜ் பாலன் ஜெகநாதன் அசாருதீன் கருப்புசாமி சவாது தினேஷ் ஹர்ஷத் மற்றும் மகளிர் அணி நிர்வாகியின் பர்வதம்மாள் சுப்புலட்சுமி ராபியா ராணி பர்வீன் உட்பட காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-சீனி போத்தனூர்.