கோவை தெற்கு மாவட்டம் சிறுபான்மை துறையின் சார்பாக மதுக்கரை ஒன்றியம் மற்றும் மலுமிச்சம்பட்டி நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா மலுமிச்சம்பட்டியில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் M.முகம்மது ஹாரூன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கோவை தெற்கு மாவட்ட தலைவர் N.K. பகவதி அவர்கள், ஒருங்கிணைப்பாளர் A.முகமது இஸ்மாயில், அவர்கள், மாவட்டத் துணைத் தலைவர் மோகன்ராஜ் அவர்கள், மதுக்கரை ஒன்றியம் மேற்கு தலைவர் கண்ணன் அவர்கள்,
மகிலா காங்கிரஸ் நிர்வாகி ராபியா அவர்கள், குறிச்சி சர்க்கிள் சிறுபான்மை துறை தலைவர் முகமது ஈஷா அவர்கள், பொதுச் செயலாளர் தனபால் அவர்கள், துணைத் தலைவர் ஜாபர் அவர்கள், செயலாளர் பிலால் அவர்கள், செயலாளர் சதாம் உசேன் அவர்கள், பர்வீன் அவர்கள், மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள்.,
1, சந்திரமோகன் மதுக்கரை ஒன்றிய தலைவர்
2, பாபு ஒன்றிய பொதுச் செயலாளர்
3, சசி ஒன்றிய துணைத் தலைவர்
4, சுரேஷ் மலுமிச்சம்பட்டி பகுதி தலைவர்
5, விஷ்ணு குமார் துணைத்தலைவர்
6, ஆரோக்கிய செல்வி பொதுச்செயலாளர்
7, அன்ன புஷ்ப ஷீபா துணைத் தலைவர்,
8, சதீஷ்குமார் செயலாளர்
9, ஆரோக்கியதாஸ் பொருளாளர்
ஆகிய நிர்வாகிகள் புதிதாக பொறுப்பு ஏற்று கொண்டனர் மேலும் கூட்டத்தில் புதிதாக காங்கிரஸ் கொடிக்கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் தேநீர் விருந்து அளித்து விழா இனிதே நடைபெற்ற முடிந்தது. இறுதியில் நன்றியுறையை மதுக்கரை ஒன்றிய தலைவர் சந்திரமோகன் அவர்கள் கூறினார்.
இதுகுறித்து தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் கூறுகையில்:-
இன்று நாடு முழுவதும் பேசு பொருளாக ஆகியுள்ள சம்பவம் அதானின் பங்கு சந்தை முதலீட்டில் கடும் வீழ்ச்சி என்ற தகவல் நாடு முழுவதும் பரவி பாலா அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முக்கிய காரணங்கள் இருக்கு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கப் போவதில்லை அதானியின் நிறுவனங்களுக்கு மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசால் எந்த அளவிற்கு சலுகைகள் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு மறைமுகமாக,
பல வங்கிகளை நிர்பந்தத்தின் அடிப்படையில் அதானிக்கு கடனை வாரி வாரி வழங்கும் திட்டமாகவே மத்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் அதான் என் பங்கு வீழ்ச்சி குறைந்து கொண்டே வந்தால் சாமானிய மக்கள் வங்கியில் வைப்புத் தொகை மற்றும் சேமிப்புகள் என்ன ஆகுமோ என்று மக்கள் மத்தியில் மிகுந்த ஒரு அச்சம் எழுந்துள்ளது.
ஆகையால் இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசு வன்மையாக கண்டிக்கிறோம் மேலும் கார்பெட் நிறுவனங்களுக்கு துணை போகும் மோடி அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.
-ஈஷா. பிலால். அருண்குமார்.