சிங்கம்புணரியில் தச்சுத் தொழில் இயந்திரங்களை திருடிய இருவர் கைது!
சிங்கம்புணரியில் உள்ள காசியாபிள்ளை நகரில் கார்த்திக் என்பவர் புதிய வீடு ஒன்று கட்டிக் கொண்டுள்ளார். இங்கு புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சேர்ந்த மாணிக்கம் ஆசாரி மகன் சசிகுமார்(வயது 35) என்பவர், அந்தக் கட்டிடத்திற்கான மர வேலைகளை அதே கட்டிடத்தில் வைத்து செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று (15 /02/23) மதியம் 2 மணியளவில் சசிகுமார் அன்றைய வேலையை முடித்துவிட்டு அவருடைய தச்சு வேலைக்கான பல்வேறு இயந்திரங்களை, கட்டிடத்திலேயே பாதுகாப்பாக வைத்துவிட்டு தனது சொந்த ஊரான பொன்னமராவதிக்கு சென்றுவிட்டு மறுநாள் வியாழக்கிழமை (16/02/23) காலை 8 மணிக்கு வேலைக்கு வந்து பார்த்த போது, அவர் அங்கு வைத்துச் சென்றிருந்த பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் அனைத்தும் திருடப்பட்டிருந்தன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து சசிகுமார், சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகாரளித்ததன்பேரில் காவல் ஆய்வாளர் முத்து மீனாட்சி வழக்குப் பதிவு செய்து, சார்பு ஆய்வாளர் (பயிற்சி) தீபா, சிறப்பு சார்பு ஆய்வாளர் குணசேகரன் தலைமை காவலர் சிவராமன் ஆகியோருடன் உடனடியாக விசாரணையில் இறங்கினார். விசாரணையில் காணாமல் போன பொருள்களை அதே கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த சிங்கம்புணரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா(22) என்பவர் அவரது நண்பர் ஸ்டாலின் (30) என்பவருடன் சேர்ந்து திருடியிருப்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் அளித்த தகவலின்படி, அவர்கள் திருடி விற்ற அனைத்து பொருள்கள் மற்றும் தச்சு வேலைக்கான இயந்திரங்களையும் இரு வேறு இடங்களில் கைப்பற்றப்பட்டன.
பின்னர் சூர்யா மற்றும் ஸ்டாலின் இருவரும் இன்று கைது செய்யப்பட்டு, சிங்கம்புணரி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பாக நேர் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.