சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பாக 15 நிமிடம் வாகனங்கள் நிறுத்தி போராட்டம்..!!

சி ஐ டி யு தொழிற்சங்கம்

சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பாக 15 நிமிடம் வாகனங்கள் நிறுத்தி போராட்டம்..!!

கோவை மாவட்டம் சி ஐ டி யுஇன்று தொழிற்சங்கத்தின் சார்பாக அவிநாசி சாலை லட்சுமி வில் பேருந்து நிலையம் அருகே 15 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அங்குள்ள வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பிரசுரம் வழங்கினர் பிரசுரத்தில் கூறியவை நாட்டின் பொருளாதார சுழற்சியில் போக்குவரத்திற்கு முக்கிய பங்கு உண்டு இந்தியாவில் 60 சதம் சரக்கு போக்குவரத்தும் 80 சதம் பயனீர் போக்குவரத்தும் சாலை வழியாகவே நடைபெறுகிறது.

பயணிகள் போக்குவதற்கும் சரக்கு போக்குவரத்துக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள். லாரி, டேக்ஸி, ஆட்டோ, டூரிஸ்ட், வாகனங்கள் சிறிய சரக்கு வாகனங்கள். பயன்படுத்தப்பட்டு வருகின்றன பொதுப்பக்குவத்திற்கு பயனளிக்கும் இந்த வாகனங்கள் 10 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

தமிழகத்தில் ஓட்டுநர்கள் பழுது நீக்குபவர்கள் வாகனங்களை புதுப்பிப்பவர்கள் என 30 லட்சம் பேர் உள்ளனர் அத்தியாவசியமான இந்த தொழிலை கார்ப்பரேட் முதலாளிகள் வசம் ஒப்படைக்கும் அடிப்படையில் 2019 இல் மோட்டார் வாகன சட்டம் திருத்தப்பட்டது 2014இல் மோடி அரசு இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தியது கடுமையான போராட்டங்கள் மூலம் சட்டத்தை நிறைவேற்றாமல். ஐந்து ஆண்டுகள் தடுத்து நிறுத்தினோம் பிஜேபி தனது மிருக பல மெஜாரிட்டி பயன்படுத்தி 2019ல் சட்டத்தை திருத்தி விட்டது. அப்போது நாம் கூறிய ஆபத்துகள் இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது தமிழக அரசே காவல்துறை ஆர்டிஓ அலுவலகங்களில் மாமுல் வாங்குவதை தடுத்து நிறுத்து ஆன்லைன் அபதாரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கும் கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

ரூபாய் 1300 பெருமான வெங்காயத்தை ஏற்றி வாகன ஓவர் லோடு எனக் கூறி 2600 பைன் வசூலிக்கப் பட்டது கொடுமைக்கு ஒரு உதாரணம். எப்சி வழங்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்பட உள்ளது சுலபமாக ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் செய்த வேலைகள் கார்ப்பரேட்டர்களுக்கு செல்ல உள்ளது எப்சி கட்டணம் பல மடங்கு உயரம் உயரப் போவதுடன் ஒர்க்ஷாப்புகளுக்கு மூடு விழா நடத்தும் சூழ்நிலை உருவாகும் ஏப்ரல் முதல் 15 ஆண்டுகள் ஆன அரசு வாகனங்கள் ஓட லாயக்கற்றவை என நிறுத்தப்பட்டுள்ளது அடுத்து.

இருசக்கர வாகனம் முதல் கார் வேன் லாரி ஆட்டோ என நம்மை நோக்கி திரும்ப போகிறது பல லட்சம் பேரின் வாழ்க்கை கேள்விக்குறியே குறியாக மாறப்போகிறது இப்போது இழைக்கப்படும் அநீதிகள் வரப்போகும் ஆபத்துகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு பெட்ரோல் கட்டணக்குள் கொள்ளை கட்டுப்பாடற்ற இன்சூரன்ஸ் உயர்வு அனைத்து வாழ்வை சூறையாடுகிறது.
ஆபத்துகளை தடுத்து நிறுத்தும் மோட்டார் தொழில் சம்பந்தமான அனைத்து வாழ்வை சூறையாடுகிறது ஆபத்துகளை தடுத்து நிறுத்த மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் ஆகும் நான். ஓனர். நீ தொழிலாளி என பிரித்து கிடக்கும் நிலையில் மோட்டர் தொழில் கார்ப்பரேட் வசம் சென்று அனைவரும் கூலி அடிப்படையாகும் ஆபத்து உள்ளது எனவே ஒன்றிய அரசும் மாநில அரசும் அத்தகையான தண்டனை அபதாரம் போன்றவற்றை கைவிட வேண்டும் புதிய வாகனங்களுக்கு அரசு மானியம் வாங்குவதுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தொழிலை முறைப்படுத்த ஆட்டோ டாக்ஸி கட்டணத்தை நீ நிர்ணயம் செய்ய வேண்டும் ஆதரவான மக்களுக்கு எதிரான உள்ள மோட்டார் வாகன சட்டத்தை திருத்த வேண்டும் பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வு டோல்கேட் கட்டணம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் நலவாரியத்தை குளறுபடி இன்றி செயல்படுத்த வாரிய பலன்கள் ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும் அரசே ஆன்லைன் செயலி உருவாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்                                                                                                                                                            -ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp