சீறும் சிறப்புமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் M.புதுப்பட்டியில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு ஶ்ரீ கூடமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா 12 ஆண்டிற்கு ஒருமுறை மிகவும் சீறும் சிறப்புமாக நடைபெற்றது.
அருள்மிகு கூடைமுடைய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் பல்வேறு சமூகத்திற்கும் குலதெய்வமாக இருக்கிறது. இத்திருக்கோவிலில் 5 ஆண்டுகட்கு ஒரு முறை இராமநாதபுர மாவட்ட 48 கிராம அனைத்து சமுகத்திற்கும் பாத்தியப்பட்ட மக்களால் கொண்டாடப்படும் விழா.
தற்போது தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவிலும், இக்கோவிலுக்குச் சொந்தமான இடங்களும் நிர்வகிக்கப்படுகிறது. மாசி மாதம் கொண்டாடப்படும் சிவராத்திரி இப்பகுதி மக்களிடையே பிரசித்திபெற்றது. திருவிழாவிற்கு சிறப்புப்பேருந்துகள் சிவகாசி மற்றும் திருவில்லிப்புத்தூரில் இருந்து இயக்கப்படும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன் தூத்துக்குடி .