கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகமாக தமிழ் வழி கல்வியை மேற்கொள்கின்றனர்.
அவர்கள் கேரளா திறனறிவு தேர்வுகளில் கலந்து கொள்வதில் மிகவும் பின்தங்கியுள்ளனர் காரணம் மலையாளம் தெரியாத சூழ்நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதும் வேலை வாய்ப்புகளை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் தேவிகுளம் பிளாக் பஞ்சாயத்து,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சார்பாக கேரளா நடத்தும் பி எஸ் சி தேர்வு தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு கேரளா யூனிவர்சிட்டி மற்றும் மணோன்மனியம் சென்டருடன் இணைந்து அவர்களுக்கு மலையாளம் கற்று கொடுத்து அவர்கள் தேர்வு சதவீதத்தினை அதிகப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள மனோன்மணியம் சென்டர் டைரக்டர் வி.ஆர்.ஜெய் கிருஷ்ணன் முயற்சி எடுத்து முதல் கட்டமாக தமிழ் கற்ற 250 மாணவ மாணவிகளுக்கு மலையாளம் கற்றுக் கொடுக்கப்பட்டு அதை நிறைவு விழாவாக அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது இதில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறி
ஞர் A.ராஜா அவர்கள் கலந்து கொண்டார். இது அவர்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன் மூணார்.