தாம்பரம் மாநகராட்சி வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர்!!!!
இன்று ( 19/2/2023 ) காலை தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை தலைமை செயலாளர் திரு. இறை அன்பு இ.ஆ.ப. ஆய்வு மேற்கொள்ள வந்திருந்தார்,
அவருடன் திரு. சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.,மாநகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் திரு.ப. பொன்னையா இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ராகுல்நாத் இ.ஆ.ப., தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் திருமதி. ர. அழகுமீனா இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர்கள் திரு. ரா. சந்திரசேகர், திரு.சேகர், கோட்ட பொறியாளர் திரு. ரவி, துணை கோட்ட பொறியாளர்கள் திரு. சிங்காரவேலன், திரு. சந்திரசேகரன், பல்லாவரம் வட்டாட்சியர் திருமதி. சகுந்தலா, காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் திரு.குமார், தாம்பரம் மாநகராட்சியின் மேயர் திருமதி. வசந்தகுமாரி கமலக்கண்ணன், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர்கள் குரோம்பேட்டை ராதா நகர் பகுதியில் அமையவிருக்கும் சிறு வாகனங்களின் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு மேற்கொண்டனர், அப்பொழுது தலைமைச் செயலாளர் சுரங்கப்பாதை பணிகளை இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் வருவதற்கு முன், அங்கு உள்ள சமூக ஆர்வலர்கள் செங்கல்பட்டு ஆட்சியரிடம் சில பிரச்சனைகளை எடுத்து சென்றனர், அப்பொழுது அவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர், மற்றும் வட்டாட்சியரிடம் சில உத்தரவுகளை இட்டு அவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அங்கு சில சமூக ஆர்வலர்களும், குரோம்பேட்டை குடியிருப்போர் நல சங்க இணைப்பு மைய பிரதிநிதிகளும் வந்திருந்தனர்.
அதன் பிறகு தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள், மாநகராட்சியின் நிர்வாக குளறுபடிகள், அதிகாரிகள், பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றை சுட்டி காட்டி ஒரு பிரதிநிதித்துவத்தை தலைமை செயலாளர் திரு. இறையன்பு இ.ஆ.ப. அவர்களிடம் சமர்ப்பித்து இருக்கின்றனர்.
-செந்தில் முருகன் சென்னை தெற்கு.