தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 11ஆம் தேதி சனிக்கிழமை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

 

ஸ்மார்ட் ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 11ஆம் தேதி சனிக்கிழமை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வட்டாட்சியர் அலுவலகம் பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதத்திற்கான சிறப்பு முகாம் 11.02.2023 அன்று இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

பெயர் திருத்தம் மற்றும் சேர்த்தல் :

இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.

புகைப்படம் மாற்றம் :

மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும்.

புகார் மனு:

மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்க ஒட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp