தேசிய குற்ற புலனாய்வு நிறுவனத்தின் கோவை கிளை திறப்பு விழா கோவையில் வெகு விமரிசையாக நடைபெற்றது!!
தேசிய குற்ற புலனாய்வு நிறுவனத்தின் கோவை கிளை திறப்பு விழா,உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது மற்றும் ஆலோசணை கூட்டம் என முப்பெரும் விழா கோவையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாட்டின் நல்லிணக்கத்தை காத்திடவும், சமூகத்தில் நன்மதிப்பை பெற்றிடவும்,குற்றங்கள் ஏற்படுவதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்தியும் என். சி. ஐ. ஏ எனும் தேசிய குற்ற புலனாய்வு நிறுவனம் நாடு முழுவதும் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.. இந்நிலையில் தேசிய குற்ற புலனாய்வு நிறுவனத்தின் தேசிய அளவிலான ஆலோசனை கூட்டம், மற்றும் கோவை கிளை துவக்க விழா, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது என முப்பெரும் விழா கோவை காளப்பட்டி சாலையில் உள்ள ஜோன் கனெக்ட் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேசிய குற்ற புலனாய்வு நிறுவனத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் ராதிகா தலைமையில் நடைபெற்ற இதில் தேசிய இணை இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு மாநில,மாவட்ட பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், சந்திரசேகரன், கீதா குமாரி, முத்துக்குமாரவேல், ரஞ்சித் குமார், சரவணன், சுதாகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்..சிறப்பு விருந்தினராக தேசிய குற்ற புலனாய்வு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் அமித் பால் கலந்து கொண்டு அமைப்பில் சிறந்து செயல்பட்டு கொண்டுள்ள உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.. தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய மாநில மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்புகள் குறித்தும் அவர்கள் செயல்படுவது குறித்தும் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
தேசிய குற்ற புலனாய்வு நிறுவனத்தின் கோவையில் நடைபெற்ற முதல் கூட்டத்தை கோவை ஒருங்கிணைப்பு குழுவினர் சுகுமார் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பாலமுருகன் சரவணகுமார் சோபன் குமார் மோகன்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
-சீனி போத்தனூர்.