நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சுட்டுக் கொல்லுவேன் டிசிசி தலைவர்??
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் உள்ள பூப்பாறை என்ற இடத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாக வன பாதுகாப்பு பணியாளர் ஒருவர் யானையால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். யானையின் தாக்குதல் அதிகரித்து வருவதால் சம்பவம் தொடர்ந்து நடைபெறக் கூடாது என கடந்த ஒரு வார காலமாக காங்கிரஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கேரளா அரசு உடனடியாக சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் யானையை அரசு வன பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக நாங்களே சுட்டுக் கொல்லுவோம் எனவும் சுடுவதற்கு தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் ஆட்கள் இருப்பதாகவும் இடுக்கி டி சி சி தலைவர் பி ஜு மேத்தியு அவர்கள் வெளிப்படையாக அறிக்கை கொடுத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.