கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் உள்ள நாகராஜா கோவில் கேரள பாரம்பரிய கோவில் ஆகும்.
இங்கு மூலஸ்தானத்தில் ஐந்து தலை நாகராஜர் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலை சுற்றி ஏராளம் பாம்பு சிலைகள் உள்ளன. பொதுமக்கள் ஆவணி மாதத்தில் இச்சிலைக்கு பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாக கருதுகின்றனர். இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது இது வேற எந்த கோவிலிலும் பார்க்க முடியாத சிறப்பு அம்சமாகும்.
அது மட்டுமல்ல இந்த கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படுகிறது இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இக்கோவிலில் அருள் பாலிக்கும் பாலமுருகனுக்கு ஆண்டு தோறும் சஷ்டி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது சூரன் பாடும் நடைபெற்றது.
நாகர்கோவிலில் தை திருவிழா 29-01-23 கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது ஒன்பதாம் நாள் தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற இருப்பதால் அன்றய தினம் 06-02-23 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் நாகர்கோவில் என்று அழைக்கப்படுவதற்கு இக்கோவிலின் பெயரை காரணம் என்பது தனி சிறப்பு.
செய்தியாளர்,
– L.இந்திரா, வீரபாகு.