பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை : ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் பள்ளி அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.,
இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு : தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவில் பல ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. அருகில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
டாஸ்மார்க் கடையில் குடித்து விட்டு பள்ளிக் கூடம் அருகில் ஆடை இல்லாமல் படுத்துக் கொள்கிறார்கள். பொதுமக்களும், பெண்களும் மிகவும் சிரமத்தில் ஆளாகி வருகிறார்கள். இதைப் பற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகையால் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர் — -முத்தரசு கோபி.