கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பவானி ஆற்றில் கவனக்குறைவாக நீராடுபவர்களில் பலர் ஆற்றின் சுழலில் சிக்கி ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கி தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். இது போன்ற உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ. கா. ப. , * அவர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் *லைப் கார்ட்ஸ் என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தக் குழுவில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி பெற்ற 10 காவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் பவானி ஆற்றங்கரை ஓரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். * அவர்கள் பவானி ஆறு மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்தும், ஆற்றில் நீராடுபவர்கள் வெள்ளபெருக்கில் சிக்கி உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இத்துவக்க விழாவில் மேட்டுப்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் *திரு. பாலாஜி. , * அவர்கள் மற்றும் காவல் துறையினர், பவானி ஆற்றங்கரையோரம் உள்ள *ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இந்த லைப் கார்டு குழுவில் உள்ள 11 பேரும் 24 மணி நேரமும் லைப் ஜாக்கெட், கயிறுகள், ஹெட்லைட் டார்ச்லைட் உள்ளிட்ட பல்வேறு உயிர்காக்கும் கருவிகளுடன் தயார் நிலையில் இருப்பார்கள். பவானி ஆற்றில் ஏற்படும் அசம்பாவிதங்களை குறித்து இந்த குழுவிற்கு பொதுமக்கள் 24 மணி நேரமும் அழைக்கலாம் அவசர உதவி தேவைப்பட்டால் மேட்டுப்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் 8667373105 என்ற எண்ணிற்கும் மற்றும் காவல் நிலைய எண் 94981-01186 மற்றும் காவல் கட்டுப்பாடு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.