“மக்கள் காவலர்” வேலூர் டிஐஜி முத்துசாமி…!!

வேலூர் சரக டிஐஜியாக பொறுப்பேற்பு

கோவையை தலைமையிடமாக கொண்ட கோவை (மேற்கு) மண்டல அலுவலகம் கோவை ரேஸ்கோர்சில் உள்ளது. இங்கு 2021 ஜூன் மாதம் 3 ஆம் தேதி கோவை மண்டல ஐ.ஜி. யாக சுதாகர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதே நாளில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த முத்துசாமி, கோவை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவி ஏற்றுகொண்ட தினம் முதல், கோவை மண்டல ஐ.ஜி சுதாகர், காவல்துறை அதிகாரிகள் அன்றாட செயல்பாடுகள், புகார்கள், விசாரணை முறை, வழக்குப்பதிவு முறைகேடுகளை கண்காணிக்கும் ரகசிய “ரிமோட்” அணுகுமுறையை கையாண்டுள்ளார். இதே பாணியில் டி.ஐ.ஜி முத்துசாமி மேற்கொண்ட அடுத்தடுத்த கடும் நடவடிக்கைகள் கோவை சரக காவல்துறைக்கு புது ரத்தம் பாய்ச்சுவதாக பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது.

டிஐஜி முத்துசாமி

ஐ.ஜி. சுதாகர் வழிகாட்டுதலின்பேரில், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி, சமீபத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் லஞ்ச அதிகாரிகளை களையெடுத்தார். கோவை மாநகர கமிஷனர் அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த கலையரசி திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இடம் மாற்றப்பட்டார்.

இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தபோது செய்த முறைகேடுகளை விசாரித்த டி.ஐ.ஜி முத்துசாமி, இன்ஸ்பெக்டர் கலையரசியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, தொண்டாமுத்தூர் காவல் நிலைய எஸ்.ஐ முருகன் செக் மோசடி புகாரில் சிக்கிய நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி அதிரடி காட்டினார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவல்நிலையத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்தார். அப்போது, குற்ற வழக்குகளை கையாளும் முறைகள், வழக்குப்பதிவு செய்ய தாமதிப்பதால் ஏழைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அறிவுறுத்தினார். கிணத்துக்கடவு சென்றாயன்பாளையம் பிரிவு அருகே முதியவர் கார் விபத்தில் பலியான சம்பவத்தில் கார் ஓட்டுனரை ஜாமீனில் விடுவிக்க 12 ஆயிரம் ரூபாய் பேரம் பேசப்பட்டது.

இந்த பேரத்தை கிண்டத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ், தலைமைக்காவலர் வெங்காடசலம் ஆகியோர் ரகசியமாக நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து,ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலரை பணியிடை நீக்கம் செய்து, டி.ஐ.ஜி முத்துசாமி அதிரடி காட்டினார். 2021 ம் ஆண்டு லாக்டவுன் காலகட்டம் காவல்துறைக்கு மிகவும் சவாலான காலகட்டமாக இருந்தது. முழு ஊரடங்கு பள்ளி விடுமுறை காரணமாக மாணவ, மாணவிகள் வீடுகளில் இருந்தனர். அவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி இருந்தனர். இந்த நேரத்தில் கோவை சரகத்தில் சிறுமியர், மாணவியர் மீதான பாலியல் தொல்லைகளை கண்டறியவும், களையவும் விழிப்புணர்வு கூட்டங்களை பள்ளி, கல்லூரிகளில் அதிகம் நடத்தியவர் டி.ஐ.ஜி முத்துசாமி. இதற்கு கோவை மாவட்ட ஏ.டி.எஸ்.பி சுகாஷினி போன்ற காவல் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும் வாய்ப்பும் வழங்கியவர்.

போக்சோ சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை தண்டிக்கவும், குற்றங்களை முளையிலேயே தடுத்து கிள்ளி எறியவும் கோவை மண்டல காவல்துறையை முழு வீச்சில் முடுக்கி விட்டவர் டி.ஐ.ஜி முத்துசாமி. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் கடந்த 2021 ம் ஆண்டு மட்டுமே கோவை மாவட்டத்தில் கல்லூரிகள், நிறுவனங்கள், பொது இடங்களில் ஆயிரத்து 190 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இதன்மூலம் குற்றங்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.கோவை மாவட்டத்தில் 2021 ம் ஆண்டில் செப்டம்பர் 14 ம் தேதி முதல் டிசம்பர் 31 ம் தேதி வரை 141 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து, குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக போக்சோ சட்டத்தை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் திறம்பட அமல்படுத்தியதற்காக கோவை சரக காவல்துறைக்கு நேச்சர் மெடிக்கேர் அறக்கட்டளை சமூக நல ஆர்வலர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதை கோவை சரக காவல்துறை சார்பில் டி..ஐ.ஜி முத்துசாமி பெற்றுக் கொண்டார். இந்த விருதும் கவுரவமும் கோவை சரக காவல்துறை சரித்திரத்தில் ஒரு மைல்கல் என்பதே மறுக்க முடியாத உண்மை..! சாதாரண மக்களும் எளிதில் அணுகும் எளிமையும், பண்பும் புகார் மனுக்கள் மீது நேர்மையாகவும், துரிதமாகவும் நடவடிக்கை எடுக்கும் கடமை உணர்வும் கொண்ட டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில் கோவை சரக காவல்துறை மென்மேலும் மிளிர்ந்தது..!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுவரையும்….
இதற்கு பிறகும்…

கோவை மேற்கு சரக காவல் துறையில் தன் பொறுப்பின் கீழ் உள்ள அதிகாரிகள் உணர்வுகளை மதிக்கும் இவரை போல ஒரு டிஐஜியை கண்டதில்லை. இனிமேல் காண்பதும் அரிது.

டிஐஜி முத்துசாமி தமிழக காவல் துறைக்கு அரிதினும் அரிதாக கிடைத்த வரம் என்றே சொல்ல வேண்டும். தற்போது வேலூர் சரக டிஐஜியாக பொறுப்பேற்று மக்கள் பணியை தொடர்கிறார். வேலூரிலும் பொறுப்பேற்றவுடன், பட்டியலின மக்களை கலெக்டருடன் “ஆலய பிரவேசம்” செய்ய வைத்து மனிதத்தை கோபுரத்தில் ஏற்றி வைத்திருக்கிறார், டிஐஜி முத்துசாமி…!

வெல்டன் சார்…!! “காவல் துறை உங்கள் நண்பன்” என்பதை பேச்சில் மட்டுமின்றி செயலிலும் காட்டியவர் டிஐஜி முத்துசாமி. இவர் போன்ற உயரதிகாரிகள் மக்களால் என்றும் மனதில் சிம்மாசனம் போட்டு போற்றப்படுவார்கள்.

– ஊடகவியலாளன்
பத்திரிக்கையாளன்
-ஆர்.கே.பி.

Leave a Comment

4 Responses

  1. Good morning sir. A Correct Article without partiality . This will encourage and supportive to the young Generation in the police department as well as for the aspirations. Thank you 🙏

  2. Good morning sir.our Respective DIG sir.Always helps to service in public motivation. And Role model of police service.God gives health wealth peaceful in our life.And Happy family sir.

  3. He is living in the hearts of thousands and thousands of common men and seated at the bottom. The humane officer of high ranking is rare and is blessed Blessings, well wishes due to his family also

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp