நாகர்கோவில் பிப்.22 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் பங்கேற்ற துளிர் அறிவியல் திறனறிதல் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் மாணவர்கள் துளிர் திறன்றிதல் தேர்வு எழுதினர். மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர்க்கவும் ஏன் ?,எதற்கு?, எப்படி? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு தீர்வை கண்டறியும் செயல்பாட்டை மாணவர்களிடம் உருவாக்குகின்றது.
மாணவர்களிடம் வாசிப்பு ஆர்வத்தை தூண்டி அவர்களை ஒரு படைப்பாற்றல் மிக்கவர்களாக உருவாக்குவதில் துளிர் அறிவியல் மாத இதழ் முக்கிய இடம் வகிக்கின்றது. இத்தேர்வு
தொடக்கநிலை பிரிவில் 4,5 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், நடுநிலை பிரிவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், உயர்நிலை பிரிவில் 9 ,10;ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் மேல்நிலை பிரிவில் 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் தேர்வை எழுதினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் விஞ்ஞானி பால்வண்ணன், செயலாளர் சிவ ஸ்ரீ ரமேஷ், பொருளாளர் செல்ல தங்கம் , துளிர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நீலாம்பரன், இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜினிதா ஆகியோர்கள் தலைமையிலான அறிவியல் இயக்க மலர் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் இத்தேர்வை நடத்தினர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழும் மாவட்ட மாநில அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பாராட்டு பரிசும் புத்தகமும் வழங்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செய்தியாளர்
-L.இந்திரா வீரபாகு.