மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!!
தமிழ்நாட்டில் ஜனவரி 31 வரை 2.47 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஜன. 31ஆம் தேதியுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நிறைவடையும் என கூறப்பட்டது. ஆனால் அப்போது 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைக்காமல் இருந்ததால் பிப். 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலமாகவும், மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடக்கிறது. மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்களும், கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
– சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.