வன விலங்குகளை பாதுகாப்பது போல் மனிதர்களையும் பாதுகாக்க கோரி கோரிக்கை மனு!!
கோவை மாவட்டம் வால்பாறை வனவிலங்குகளை பாதுகாப்பது போல் மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வனத்துறை இடம் கோரிக்கை மனு.
கோவை மாவட்டம் வால்பாறை தமிழக வனத்துறை அமைச்சருக்கு வால்பாறை பரமசிவம் அனுப்பி உள்ள மனுவில் கோவை நீலகிரி மாவட்டங்களில் குறைந்த சம்பளத்தில் மருத்துவ வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தனது எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேயிலை தோட்டங்களில் நான்கு ஐந்து தலைமுறையாக சொந்த ஊரில் இடம் இல்லாமல் பணி புரிகிறார்கள்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாள்தோறும் வனவிலங்குகள் தாக்குதல் குடியிருப்பு சேதம் ஏற்படுத்துகிறது மனித உயிரும் சேதமும் ஆகிறது. இதனால் இவர்கள் குடும்பமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது வாழ்வாதாரம் இழப்பும் ஏற்படுகிறது. தமிழக அரசு அடர்ந்த வனப் பகுதியில் வனவிலங்குகள் விரும்பி உண்ணும் வாழைமரம் பிலாக்காய் மரம் தென்னை மரம் மற்றும் கனிகள் வகைகள் பயிரிட வேண்டும் அப்பொழுதுதான் எஸ்டேட் பகுதிக்குள்ளே குடியிருப்பு குள்ளே வனவிலங்குகள் வராமல் இருப்பதற்கு தடுக்க முடியும் அது மட்டுமல்லாமல் வனத்துறை ஒட்டி இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் மின் வேலிகள் அமைக்க வேண்டும் வனவிலங்குகள் பாதுகாப்பு அளிப்பது போல் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் மற்றும் அடர்ந்த வனப் பகுதியில் சிலர் ஆக்கிரமரைப்பு செய்து பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் வனவிலங்கும் வாழும் இடத்தில் வனவிலங்குகள் வாழும் என்பதை தாங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் அப்பாவி தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்குகள் தேவையான உணவுகளை தேடி குடியிருப்பு சுற்றிலும் வருவதினால் மின் வேலி. அமைக்கவும் வனவிலங்கு ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டு அடர்ந்த இடத்தில் வனவிலங்குகள் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பொது நலத்துடன் வால்பாறை பரமசிவம் சி. ஐ. டி. யு. கோரிக்கை மனு அளித்துள்ளார் மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பது போல் மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நினைவில் குறிப்பிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.