வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் சாலையை புதுப்பித்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள காமராஜ் நகர் பகுதியில் சாலைகல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையில் உள்ள ஜல்லிக்கல்கள் பெயர்ந்து சாலையே இல்லாத அளவுக்கு படுமோசமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த சாலையில் பஸ் கார் வேன் ஆட்டோ இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது மண் மற்றும் தூசிகள் எழும்பி சாலையே ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
அந்தப் பகுதியில் உள்ள சாலைகளில் மண்கள் கொட்டி வைத்துள்ளதால் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது அந்த மண்கள் காற்றில் எழும்பி அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கும் இந்த மண்புழுதி புகுந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் கண் மற்றும் சுவாச குழாய்களில் இந்த தூசிகாற்று செய்வதால் பொதுமக்களுக்கும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே கரடு முரடான இந்த சிதிலமடைந்த இந்த சாலையை விரைவில் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.