NALAIYA VARALARU
உயிரை பணயம் வைத்து சுற்றுலா பயணிகளை உயிரை காப்பாற்றிய வனத்துறையினர்….
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளம் வந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் குதூகலமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று காட்டாற்று வெள்ளம் வந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த வெள்ளத்தில் 30க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனர். அப்பொழுது வனத்துறை அதிகாரி டேவிட் ராஜன் தலைமையில் வனத்துறையினர் அவர்களை காட்டாற்று வெள்ளத்தில் இருந்து மீட்க உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டது.
பெரியகுளம் பகுதியில் பரபரப்பை, ஏற்படுத்திய நிலையில் வனதுறையினரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனமார பாராட்டி வாழ்த்துகின்றனர். வாழ்க வனச்சரகர் டேவிட் ராஜன் மற்றும் வனத்துறையினர் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மனம் மகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் பல பேர் தண்ணீரில் தொலைத்த தங்க பொருட்களை மீட்டெடுத்து கொடுத்து,மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு சாதனை புரிந்து,இயற்கை வளங்களையும் பாதுகாத்து,பல அறிய சாதனைகளுக்கு சொந்தக்காரர்கள் என்ற பெருமையையும் பாராட்டையும், வனத்துறையினர் பெற்றுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ரபீக் ராஜா.