கிணத்துக்கடவு அருகே உள்ள சொலவம்பாளையம் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் தன்னாசி(வயது 51). விவசாயி. இவருடைய மனைவி கோமளா (38). இவர்களுக்கு 3½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தன்னாசிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தன்னாசி
கடந்த 5-ந் தேதி இரவில் தனது தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அங்கு விஷத்தை மதுவில் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை தேடி கோமளா அங்கு வந்தார். அப்போது தன்னாசி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உறவினர்கள் உதவியுடன் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் தன்னாசி நேற்று முன்தினம் இரவில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அருண்குமார் கிணத்துக்கிடவு.