குப்பை கழிவுகளை காற்றில் பறக்க விட்டபடி செல்லும் மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனங்கள்!
கோவை மாநகராட்சியை சுற்றிலும் உள்ள இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் அனைத்தும் வெள்ளலூர் குப்பை கிடங்குக்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இங்கு மறுசுழற்சி முறையில் குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகின்றன.
மாநகரின்ப ல்வேறு பகுதிகளில் இதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குப்பை பெட்டிகளை வைத்து அதன் மூலம் குப்பை கழிவுகளை சேகரித்து அதை மாநகராட்சி வாகனங்களின் மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்குக்கு எடுத்து செல்கிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குப்பை கழிவுகளை சேகரிக்க வைக்கப்பட்டிருக்கும் குப்பை பெட்டிகள் சில இடங்களில் மிகவும் பழுதடைந்து பெட்டிகளை சுற்றி அடிக்கப்பட்டிருக்கும் தகரங்கள் பெயர்ந்து எலும்பு கூடாக காட்சியளிக்கின்றன இதில் குப்பை கழிவுகள் நிரம்பி விட்டால் மாநகராட்சி குப்பை அல்லும் வாகனங்களின் மூலம் அதை எடுத்து வருகின்றனர் இவ்வாறு எடுத்து வரும்பொழுது பழுதடைந்த ஓட்டையும் உடைசலுமாக உள்ள பெட்டிகளில் இருந்து குப்பை கழிவுகள் காற்றில் பறந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் மீதும் சாலைகளிலும் கொட்டிக்கொண்டே செல்கிறது இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.எனவே இதுபோன்ற பழுதடைந்த ஓட்டையும் உடைசலமாக உள்ள குப்பை கழிவுகளை எடுத்துச் செல்லும் பெட்டிகளை மாற்றி விட்டு நல்ல தரமான குப்பை கழிவுகளை சேகரிக்கும் பெட்டிகளை வைத்து குப்பை கழிவுகளை சேகரிக்க வேண்டும் என்றும் குப்பை கழிவுகளை கொண்டு செல்லும் வாகனங்களில் இருந்து குப்பைக் கழிவுகள் கீழே விழாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.