கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள மத்திய சிறையில், 2100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளுக்கு, வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் டாக்டர் நஞ்சப்பா சாலையில், ஏற்கனவே ஒரு பெட்ரோல் பங்க், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டு வருகினற்து, ஜெயில் அங்காடியும் தனியாக நடத்தப்படுகிறது.
பெட்ரோல் பங்க்கில் ஜெயில் கைதிகள் 30 பேரும், அலுவலர்கள் 10 பேரும், ஜெயில் அங்காடியில் 4 பேரும் வேலை பார்க்கின்றனர். ஜெயில் நிர்வாகம் சார்பில் கைதிகள் நலன் கருதி நடத்தப்படும் பெட்ரோல் பங்க் என்பதால் வாகன ஓட்டிகள் பலர் விரும்பி வந்து பெட்ரோல் பிடிக்கின்றனர்.
இதற்கு இருக்கும் வரவேற்பை உணர்ந்த ஜெயில் நிர்வாகம் 2-வது பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் பஸ் நுழையும் இடத்துக்கு அருகே பாரதியார் சாலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து, இன்னொரு பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மத்திய ஜெயில் கண்காணிப்பாளர் ஊர்மிளா இது குறித்து இன்று தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது; டாக்டர் நஞ்சப்பா சாலையில் ஜெயில் நிர்வாகம் நடத்தும் பெட்ரோல் பாங்க் தான் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பங்க்குகளின் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது சுத்தமான பெட்ரோல் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால், நாளுக்கு நாள் விற்பனை அதிகரிக்கிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 20 முதல் 22 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. பாரதியார் சாலையில் புதிதாக தொடங்கப்படும்
பங்க் மூலம் கைதிகள் 30 பேருக்கும், அலுவலர்கள் 10 பேருக்கும் வேலை கிடைக்கும். இதில் வேலை பார்க்கும் கைதிகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதால், அவர்களும், குடும்பத்தினரும் பயன் பெறுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.