கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கடவுள் கோனியம்மன், டவுன் ஹால் பகுதியில் அமைந்திருக்கின்ற கோனியம்மன் திருக்கோவிலில் வருடந்தோறும் மாசி மாதம் நடைபெரும் கோனியம்மன் திருக்கோயில் தேரோட்டம் பிரபலமான தேரோட்டம்.
இந்த தேரோட்டத்தை காண ஆண்டு தோறும் கோயம்புத்தூர் மட்டும் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆன்மீக பக்தர்கள் படையெடுத்து, கோனியம்மன் திருக்கோயில் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபடுவது வாடிக்கையான ஒன்று. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கோனியம்மன் திருக்கோவில் சார்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையிலே, இரண்டு மணிக்கு மேல் கோனியம்மன் திருக்கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக
பக்தி பரவசத்துடன் அரங்கேறியது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட இந்து பக்தர்கள் பொதுமக்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் பயணித்த பாதைகளில் ஒன்றினைந்து வடம் பிடித்து இழுத்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ராஜவீதி தேர்நிலை திடலில் இருந்து வடம்பிடித்து இழுத்து வரபட்ட தேரானது, பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, பிரகாசம் சாலை வழியாக, பழமார்கெட் அடைந்து மீண்டும் ராஜவீதி தேர்நிலை திடலிலுக்கு வந்தடைந்தன. தேர் திருவிழாவின் ஒரு பகுதியாக ஜமாப் இசை முழங்க ஆட்டம் பாட்டமுடன் தேர் கோனியம்மன் தேரோட்டம் அரங்கேறியது. இந்த நிலையில் பக்தர்கள் தங்கள் வேண்டுகோளுக் கிணங்க தேரின் மீது வேண்டுதல் உப்பு மழை தூவினர்.
கோனியம்மன் திருக்கோயில் பக்தர்கள் டவுன்ஹாலில் உள்ள திருக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோனியம்மன் திருக்கோயில் தேர் வான் உயர ஜோடிக்கப்பட்டு ஒய்யாரமாக ஊர் வலமாக வந்தது பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தி இருக்கின்றன. தேரோட்டம் என்பதனால் கிராமத்து நடையிலான கடைவீதி, பொம்மை விற்பனை, பெண்கள் குழந்தைகள் பெரியவர்களை கவரும் பொருட்களின் ஸ்டால் உள்ளிட்டவை தேர் உலா வரும் பாதைகளில் அமைக்கப்பட்டு கோவை மாநகருக்குள் ஒரு கிராமத்தை பார்க்க முடிந்தது. வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்த கோனியம்மன் திருக்கோயில் தேரோட்டத்தை ஏராளமானோர் கண்டு ரசித்து பரவசப்பட்டனர்.
கோனியம்மன் திருக்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் 1500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றனர். குறிப்பாக நான்கு துணை ஆணையர்கள், 11 உதவி ஆணையர்கள், 25 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். கோயில் திருவிழாக்களை பயன்படுத்திக் கூட்டத்தில் பிட்பாக்கெட் அடிக்கும் கொள்ளைகளை தடுக்க தனிப்படையும் , மாடியிலிருந்து பைனாகுலர் மூலம் தீவிர கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப் பட்டிருந்தது. மாநகர காவல்துறையினர், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து திருவிழாவை சிறப்பாக நடத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.