கோவை கோபாலபுரம் பகுதியில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாநகரில் ஒரு சில இடங்களில், கடந்த சில நாட்களாக நடைபெற்ற தீ விபத்தின், பின்னனியை பார்க்கும் போது, மின் ஒயர்களில் ஏற்பட்ட சின்ன ஸ்பார்க்கில் இருந்து ஷார்ட் ஷர்க்கியூட் மூலமாக தீ விபத்து நடைபெற்றுள்ளது. கோடை காலத்தில் இது போன்ற தீ விபத்துகள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் மின்சாதன, பயண்பாடுகளை முறையாக பயன்படுத்த வேண்டும். முக்கியமாக பெரிய பெரிய வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது வீட்டில் பயண்படுத்தபடும் ஏசி, மற்றும் கடைகளில் பயண்படுத்தபடும் எலக்ட்ரிக் சாதனங்களில் இருந்து கூட மீன்கசிவு ஏற்பட்டு இது போன்ற தீ விபத்துகள் நடைபெறலாம். எனவே தங்களது வீடுகளில் மற்றும் அலுவலகங்களில், கடைகளில் முறையாக மின் இணைப்புகள் உள்ளதா, என்று அதனை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், இவ்வாறு நாம் செய்யும் பொழுது சிறிய அளவிலான ஷார்ட் சர்க்யூட் நிகழ்வுகளை தடுக்க முடியும்.
சிறிய அளவிலான தீ விபத்துக்கள் பெரிய அளவிலான உயிர் சேதங்களை ஏற்படுத்தும் வலிமை உள்ளது. எனவே மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் எனவும், மேலும் தங்களது வீடுகளில் அருகாமையில் உள்ள குப்பைகளில், தீ வைப்பவர்கள் அதனை முறையாக அணைத்து விட்டு செல்ல வேண்டும் என்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
– சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.