கோவையின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான ஒப்பணக்கார வீதியில் பிரசாத் பரிச் என்பவருக்கு சொந்தமான விளையாட்டு பொருட்கள் விற்பனை அங்காடியில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு ஒரு மணி அளவில் கொழுந்து விட்டு எரிந்தது. உடனே அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர்.
தீயை அணைக்க முடியாமல் அவர்கள் போராடியதில் பல லட்ச ரூபாய் பொருள் எரிந்து சேதம் அடைந்தது நேரம் செல்ல செல்ல அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறை போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி சாலையில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலை முழுவதும் புகை மண்டலமாய் காட்சியளித்தது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.