கோவை குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியை மேம்படுத்த கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் சுந்தராபுரம் சங்கம் வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் குறிச்சி பள்ளியை மேம்படுத்திடவும், பள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்க வேண்டும் மேலும் பள்ளிக்கு சென்று வர ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தை கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி வேறுபாடுன்றி அனைவரும் கலந்து கொண்டனர். அதி.மு.கவைச் சேர்ந்த குறிச்சி மணிமாறன், காங்கிரஸை சேர்ந்த கு.பே.துரை, வசந்த், 85வது மாமன்ற உறுப்பினர் சரளா தே.மு.தி.க வாழை இலை முருகேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த முரளி, ஸ்டீபன், தி.மு.கவைச் சேர்ந்த சிதம்பரம், தேவர் சமூக சங்கத்தின் செயலாளர் மனோகரன்,
குறிச்சி குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தீபம் சாமிநாதன், ரெயில்வே பயணாளிகள் சங்கத்தின் சுப்ரமணியன், நூர் முகமது, சமூக ஆர்வலர் முகமது சபீக், மக்கள் பசுமை இயக்கத்தின் சேது மற்றும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த செல்வராஜ், ராஜூ, பெருமாள்சாமி, காந்தி கருப்பையா, முத்துசாமி, சம்பத்குமார், லட்சுமணன், பொன்னுக்குட்டி, சதீஸ் மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-சீனி, போத்தனூர்.