கோவை திருச்சி சாலையில் உள்ள டி.வி.எச்.விஸ்டாவில் நடைபெற்ற 2 வது நாள் விழாவில் பிரபல தனியார் டிவி புகழ் தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் கலந்து கொண்டார்…
கோவை திருச்சி சாலையில் உள்ள டி.வி.எச். ஹைட்ஸ் குழுமங்களின் டவர் செவன் துவக்க விழாவை முன்னிட்டு விஸ்டா வளாகத்தில் தி கிரேட் ஹவுசிங் ஃபெஸ்டிவல் என இரண்டு நாட்கள் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது…முதல் நாள், துவக்க விழாவில் டி.வி.எச் குழுமங்களின் தலைவர் ரவிச்சந்திரன் விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக கட்டுமான பணிகள் நடந்து வரும் டவர் செவனின் மாடல் வீடு பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது.இரண்டு பெட்ரூம், டைனிங் ஹால், கிச்சன் என சுமார் 1250 சதுர அடியில் கட்டப்பட்டிருந்த மாடல் வீட்டை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு வியந்து உடனடி முன்பதிவையும் செய்ய துவங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில்,முக்கிய விருந்தினர்கள் சங்கீதா சேத்தன்,அபர்ணா சுங்கு,சார்லஸ் ஃபேபியன்,ரமேஷ் குமார்,சங்கீதா பீட்டர்,கார்த்திக் சுரபி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்..டி.வி.எச்.விஸ்டா கோவை தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதேவி அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரபல தனியார் டி.வி.சேனல் தன்னம்பிக்கை பேச்சாளரும்,எழுத்தாளரும் ஆன கோபிநாத் கலந்து கொண்டு பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குடும்பத்தில் ஒற்றுமை அவசியம் என்பதை நகைச்சுவையுடன் அவர் பேசியதை டி.வி.எச்.அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கைகளை தட்டி மகிழ்ச்சியுடன் ரசித்தனர்..தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதேவி, டவர் செவன் புதிய திட்டம் 12.5 ஏக்கரில் அமைந்துள்ளது. 800 க்கும் அதிக வீடுகளுடன் 12 சூப்பர் கோபுரங்கள், அம்சங்கள் மற்றும் அனைத்து வசதிகளுடன்,கூடிய புதிய வீடுகளுக்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-சீனி போத்தனூர்.