NALAIYA VARALARU
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு புகார் மறு தேர்வு நடத்த கோரிக்கை !!!
தமிழ்நாட்டில் குரூப் 4 எழுத்துத் தேர்வு 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 25ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஏற்கனவே நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும்.
உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக ( தூத்துக்குடி மாவட்ட தலைவர் (எஸ் டி) ரா. பாலச்சந்திரபூபதி.) சார்பாக வலியுறுத்துகிறேன்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.