திருப்பூர்:
‘இந்தியா இன்டர்நேஷனல் நிட்பேர்’ கண்காட்சி வளாகத்திலும், ஸ்டால்களிலும், ‘சஸ்டெய்னபிலிட்டி’ திருப்பூர் என்ற சாதனை விளக்க பேனர்களும், விளம்பர அட்டைகளும் வைக்கப்பட்டுள்ளன. நீடித்த நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சம் பொருந்திய திருப்பூர் என்பதை விளக்கி, வெளிநாட்டு வர்த்தகர்களை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, திருப்பூரின் தனித்துவ சாதனைகளை விளக்கி, கண்காட்சியில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதன் வாயிலாக, ‘கிரீன் டெக்னாலஜி’ என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கையை பின்பற்றும் நாடுகள், திருப்பூரின் பக்கம் திரும்பி பார்க்க துவங்கியிருப்பதாக, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருப்பூரின் தேவையை காட்டிலும் கூடுதலாக, காற்றாலை மின்சாரம் வாயிலாக, 1,600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி மாவட்ட அளவில், 350 மெகாவாட் அளவுக்கு, சோலார் மின்சக்தி உற்பத்தி சாயக்கழிவுகளை சுத்திகரித்து, 60 தனியார் மற்றும் 310 சாய ஆலைகள், ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ தொழில்நுட்பத்தில், தினமும், 13 கோடி லிட்டர் கழிவுநீரை மறுசுழற்சி முறையில் சாயமிடுவது பயன்படுத்துவது. பின்னலாடை உற்பத்தியில், பனியன் ‘கட்டிங்’ கழிவுகள், 15 சதவீதம் அளவுக்கு உருவாகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவற்றை வீணடிக்காமல், மீண்டும் ‘பைபர்’ ஆக மாற்றி, மறு உற்பத்தி நடக்கிறது.l வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 15.50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மாவட்டத்தின் பசுமை பரப்பு உயர்ந்துள்ளது. 7,000 டன் அளவுக்கு, கார்பன் -டை -ஆக்சைடு, காற்றில் இருந்து உறிஞ்சப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. எரிசக்தி சேமிப்புக்கான திட்டங்கள் வாயிலாக, எரிவாயு, மின்சாரம் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது.
வீடு மற்றும் தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மரம் வளர்ப்பு போன்ற பணிகளுக்கு பயன்படுத்துவதன் மூலம், நீர்பயன்பாடு குறைந்துள்ளது. இத்தகைய, திருப்பூரின் தனித்துவம் மிகுந்த சாதனைகளை, வெளிநாட்டு வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்கள், வர்த்தக முகமைகள் பார்வைக்காக, கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாட்ஷா.